காத்தான்குடி றிசானுக்கு சிப்லி பாரூக்கின் உதவிக்கரம்

0
136

(M.T. ஹைதர் அலி)

Cover photoவறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடனும் வறிய மாணவர்களின் கல்வி சார்ந்த விடயங்களிலும் இன, மத பேதமின்றி அக்கரையும் கரிசனையும் காட்டி வரும் பொறியியலாளர் சிப்லி பாறுக்,  விசேட தேவையுடையவராக இருந்தும் கணனித்துறை சார்ந்த கல்வியினை கற்று வீட்டில் கணனி மூலம் அச்சு இயந்திர வேலைகளை மேற்கொண்டு தனது குடும்பத்தினை பராமரித்து வரும் இளைஞன் ஒருவருக்கு தனது வேலைத்தளத்தினை அதிகரித்து கொள்வதற்கும் அவரின் சுயதொழிலை ஊக்குவிப்பதற்காகவும் அவரின் வேண்டுகோளுக்கமைவாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுகினால் CPU வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் (14) செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மூன்றாம் குறிச்சியில் வசித்துவரும் றிஸான் எனும் இளைஞனின் வீடு நாடிச்சென்ற மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அந்த இளைஞனிடம் அதனை கையளித்தார்.

DSC_0007 DSC_0016

LEAVE A REPLY