ஆசிரியர்கள் வேண்டுமெனக்கோரி மாணவர்களும் பெற்றோரும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

0
163

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

IMG_3296இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அல்லது அவர்களுக்குப் பதிலீடாக ஆசிரியர்கள் பாடசாலைக்கு வேண்டுமெனக்கோரி மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களும் அவர்களின் பெற்றோரான கிராமத்தவர்களும் இணைந்து இன்று (16) வியாழக்கிழமை மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான நெடுஞ்சாலையை வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இதனால் மட்டக்களப்பு திருகோணமலைக்கான போக்குவரத்து காலை 7.00 மணியிலிருந்து கதிரவெளியில் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

மேற்படி வித்தியாலயத்தில் கற்கின்ற 425 மாணவர்களுக்கு 9 ஆசிரியர்களே கற்பித்து வந்த நிலையில், அவர்களில் இருவர் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மட்டக்களப்பு நகரத்துப் பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இடமாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் தமது பாடசாலையில் திருப்பித்தர வேண்டும் எனக்கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

2இதேவேளை ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மட்டக்களப்பு திருகோணமலைக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதால் காரியாலய கடமைகளுக்குச் செல்லும் பலநூற்றுக் கணக்கானோர் பயணம் தடைப்பட்டு இடைவழியில் சிக்கியுள்ளனர்.

நிலைமையக் கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தமக்கு உடனடித் தீர்வு கிடைக்கும்வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை விட்டு நகரமாட்டோம் என சூளுரைத்துள்ளனர்.

மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலீடாக மற்றும் இரு ஆசிரியர்களை அடுத்த இருவாரங்களுக்குள் வழங்குவதாக வாகரைக் கோட்டக் கல்வி அதிகாரிஎஸ். பரமேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் ஆகியோர் உறுதியளித்ததை அடுத்து காலை 7 மணியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காலை 9.15 இற்கு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

கதிரவெளியில் தடைப்பட்டடிருந்த திருகோணமலை –மட்டக்களப்பு போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டது. 3 4 6 7 IMG_3294 IMG_3298 IMG_3299 IMG_3300

LEAVE A REPLY