அல்மனார் மத்திய கல்லூரியின் புதிய அதிபருக்கும் Manariyan daystar நிர்வாகத்தவர்களுக்குமிடையில் சந்திப்பு

0
119

imageஅல் மனார் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக கடமையேற்றிருக்கும் MAM.இனாமுல்லாஹ், Manarian’s Daystars இன் நிர்வாக உறுப்பினர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 14.06.2016 இரவு 7.30 மணிக்கு அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கல்லூரியின் பிரதி அதிபர் AM.அன்ஸார்  கலந்து கொண்டார். அமைப்பின் உருவாக்கம் மற்றும் நோக்கங்கள் பற்றி அறிமுக உரையை செயளாலர் AJ.துவைஜ் அஹமட் ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் தற்போதைய பாடசாலையினுடைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்தனர். பாடசாலையினுடைய அத்தியவசியத் தேவைகள் எனும் திட்ட வரைபொன்றை அதிபர் MAM.இனாமுள்ளாஹ்,  அமைப்பின் தலைவர் HM.ஹுமைஸ் யிடம் கையளித்தார். இன்ஷாஅல்லாஹ் மிகவிரைவில் ஏதாவது ஒரு திட்டத்தை எமது அமைப்பினூடாக நடைமுறைப்படுத்துவோம் என்றும் தொடர்ச்சியாக பாடசாலையுடன் சேர்ந்து பாடசாலையின் முன்னேற்றத்துக்காக செயற்படுவோம் என்றும் தலைவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY