தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதனை ஏற்க முடியாது – பழனி திகாம்பரம்

0
154

imageஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், மலையக புதிய கிராமங்கள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமான் அரசாங்கத்தில் இணைந்து கொண்டாலும் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப்பதவி வழங்கினால் அதனை தாம் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY