அசாம்-மேகாலயா எல்லையில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி

0
152

imageஅசாம் மாநிலத்தில் சில்சர் பகுதியில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று சோனாப்பூர் மந்திர் அருகே ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேகாலயா மாநில எல்லையில் உள்ள கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு இந்த விபத்து ஏற்பட்டது.

பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேருந்து சுமார் 500 அடி ஆழத்தில் விழுந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இரவு நேரம் என்பதால் விபத்து நடந்த இடம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் மீட்பு பணியை உடனடியாக மேற்கொள்ள முடியாமல் காலை வரை காத்திருக்க வேண்டியதாயிற்று என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும், பேருந்தில் 35 பேர் பயணம் செய்ததாகவும், அதில் 95 சதவீதம் பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் போலீசார் தெரிவித்தனர்

LEAVE A REPLY