இலங்கைக்கு பொருளாதார கண்டுபிடிப்புக்களில் 85வது இடம்

0
119

sri-lanka-flag-1-620x330இலங்கை, உலகளாவிய ரீதியில் பொருளாதார கண்டுபிடிப்புக்களில் 85வது இடத்தை பிடித்து முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 105வது இடத்தை பிடித்திருந்ததாகவும் தற்போது 20 நிலைகளில்முன்னோக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் புத்தாக்கம் அளவிடக்கூடிய முன்னோடியான கண்டுபிடிப்புக்களில் ஒன்றே உலகளாவிய பொருளாதார கண்டுபிடிப்பின்குறியீடு ஆகும்.

இலங்கை பல பொருளாதார துறைகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், இதனை முதலாம்இடத்திற்கு கொண்டு வருவதே எமது நோக்கமாக அமைய வேண்டும் என கைத்தொழில் மற்றும்வர்த்தக அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அறிவுசார் சொத்துக் கொள்கை மற்றும் தேசிய அளவிலான புத்தாக்கம் தொடர்பில்கொழும்பில் இடம் பெற்ற மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே நேற்று இதனை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூக-பொருளாதார நோக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை தேசிய அளவிலான புத்தாக்க மற்றும் அறிவுசார் சொத்து கொள்கை மாநாடு மூலம் எதிர்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதுமையான சிந்தனையின் மூலம் நாட்டின் வளர்ச்சியை திறம்பட செயற்படுத்துவதன்ஊடாக விஞ்ஞான காலாச்சாரத்தை எளிதில் உருவாக்க முடியும் என்றும் பதியுதீன்மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY