கோபா கால்பந்து தோல்வி எதிரொலி: பிரேசில் கால்பந்து பயிற்சியாளர் நீக்கம்

0
19

201606151309496007_Dunga-sacked-as-Brazil-head-coach-following-Copa-America_SECVPFபிரபல போட்டியான கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பலம் வாய்ந்த பிரேசில் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது.

கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 0–1 என்ற கோல் கணக்கில் பெருவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

முதல் தோல்வியை சந்தித்த பிரேசில் அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 3–வது இடம் பெற்று கால் இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஏற்கனவே பிரேசில் அணி ஒரு வெற்றி (ஹைதிக்கு எதிராக), ஒரு டிரா (ஈகுவடாருடன்) கண்டு இருந்தது. இந்த போட்டி தொடரில் 1987–ம் ஆண்டுக்கு பிறகு பிரேசில் அணி முதல் சுற்றுடன் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.

இது அந்த நாட்டு ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பிரேசில் அணியின் பயிற்சியாளர் துங்கா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரேசில் கால்பந்து சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

LEAVE A REPLY