iOS 10 இயங்குதளத்தில் இடம்பெறும் பயனுள்ள வசதி

0
108

625.0.560.320.500.400.194.800.668.160.90ஸ்மார்ட் கைப்பேசிகளில் பொதுவாக இரு வகையான மென்பொருட்கள் நிறுவப்பட்டிருக்கும்.

ஒன்று இயங்குதளத்துடன் சேர்த்து நிறுவப்பட்டிருக்கும் மென்பொருட்கள், மற்றையது நம்மால் தரவிறக்கம் செய்து நிறுவப்படக்கூடிய மென்பொருட்கள்.

இதில் இயங்குதளத்துடன் தரப்பட்டுள்ள மென்பொருட்கள் நமக்கு அவசியம் இல்லாமல் இருந்தாலும் அவற்றினை கைப்பேசிகளில் இருந்து நீக்க முடியாது.

மாறாக நம்மால் நிறுவப்பட்ட மென்பொருட்களை தேவைக்கு ஏற்றாற் போல் நீக்கி கொள்ள முடியும்.

எனினும் இயங்குதளத்துடன் தரப்பட்டிருக்கும் மென்பொருளையும் நீக்கக்கூடிய வசதியினை அப்பிள் நிறுவனம் பயனர்களுக்காக தருவதற்கு ஆவலாக உள்ளது.

இதன்படி இவ் வசதியினை அடுத்து வெளியிடவுள்ள iOS 10 பதிப்பில் தரவுள்ளது.

இவ் வசதியானது அனைத்து அப்பிள் மொபைல் சாதன பாவனையாளர்களையும் கவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY