மட்டக்களப்பில் அஞ்சல் சேவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0
186

(விசேட நிருபர்)

25647c03-d479-44ca-9109-3f25c4269afdஅஞ்சல் சேவை ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு பிரதம அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னாள் (15.6.2016) புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் மட்டக்களப்பு அஞ்சல் அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சிறிலங்கா தபால் தொலைத்தொடர்புச் சேவை சங்கம், மற்றும் அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல்  சங்கம், தபால் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர் சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர்.

பிற்பகள் 12.30 மணி தொடக்கம் 1.30 மணி வரை இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது புதிய சம்பளத்திட்டத்திற்கமைய அஞ்சல் ஊழியர்களுக்கு 25 வீதம் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் 50 வீதம் போனஸ் கொடுப்பனவை வழங்கவேண்டும், பதவியுயர்வுகளுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும், அனைத்து தரங்களிலுமுள்ள ஊழியர்களுக்கான சம்பள முறன்பாட்டை நீக்க வேண்டும், கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவை உடனடியாக வழங்க வேண்டும், அஞ்சல் அலுவலகங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தபால் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ரதீஸ்வரன் இதன் போது கருத்து தெரிவிக்கையில், எங்களது அஞ்சல் சேவை என்பது அத்தியாவசியமான ஒரு சேவையாகும். எங்களுக்கு 1966ம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வந்த மேலதிக கொடுப்பனவு இவ்வாண்டு மே மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மேலதிக கொடுப்பனவை எமது அஞ்சல் திணைக்களம் உடனயடியாக வழங்க வேண்டும்.

அதே போன்று புதிய சமட்பளத்திட்டத்திற்கமைய அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலகதிக கொடுப்பனவை வழங்க வேண்டும். அதை வலியுறுத்தியே இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடர்துகின்றோம் என்றார்.

2e2f5170-651b-46ef-9ace-d67e423b8b08

4a2c92ee-bdcd-4cf2-ae8f-916a0c97d374

42d54a0e-a06a-4aed-9b7a-98207517a133

60c4a0a3-f7ba-46cf-b477-ae788455e7a0

775c425e-71f2-4cde-b7b7-fd692a01ddc3

25647c03-d479-44ca-9109-3f25c4269afd

64409f4d-233d-4322-a80f-9e9908ab5e72

b20d9959-e8db-4279-9671-7d977c160ef2

bc669b21-45e1-4f30-98e1-d73cb420a734

LEAVE A REPLY