அமெரிக்காவிலுள்ள பள்ளிவாசல்கள் கடும் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட வேண்டும்

0
219

Cobb-TrumpinNewHampshire-1200 (1)அமெரிக்காவிலுள்ள பள்ளிவாசல்கள் கடும் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட வேண்டும் டொனால்ட் டிரம்ப் இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்கா மீது முழுமையான போரொன்றைத் தொடுத்துள்ளதாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் அமெரிக்காவிலுள்ள பள்ளிவாசல்கள் கடும் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“இது முழுமையான போராகும். ஆனால் நாம் இந்தப் போரில் (இராணுவ) சீருடை அணியவில்லை” என அவர் தெரிவித்தார்.

ஒர்லான்டோ பிராந்தியத்திலுள்ள தன்னினசேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் சுமார் 50 பேரைப் பலிகொண்ட தாக்குதல் சம்பவம் குறித்து ‘பொக்ஸ் அன்ட் பிரென்ட்ஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி பள்ளிவாசல்கள் சில தீவிரவாதிகளும் தீவிரவாதிகளாக மாறுபவர்களும் அடிப்படைவாதத்தால் தூண்டப்படுவதற்கான இடங்களாக உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

LEAVE A REPLY