ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராகிறார்?

0
187

Thondamanஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுன் தொண்டமான் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடையே இந்த வாரத்தில் சந்திப்பொன்றை மேற்கொண்டதன் பிறகு இறுதி முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினுடம் அடுத்த வாரமளவில் அரசாங்கத்துடன் இணையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அரசாங்கத்தில் இணையும் பட்சத்தில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவியொன்றும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு பிரதி அரமைச்சர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#Virakesari

LEAVE A REPLY