மட்டக்களப்பு ஆசிரியருக்கு ஜனாதிபதி குருதிக் கொடையாளர் விருது

0
122

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

518ecb4a-a49d-4735-a0ef-eefb1a55678aமட்டக்களப்பு ஆசிரியர் ஒருவருக்கு ஜனாதிபதி குருதிக் கொடையாளர் விருது கிடைத்துள்ளது. அதிக குருதியை வழங்கியமை, குருதிக் கொடை வழங்குவதற்கான ஒழுங்குப்படுத்தலை மேற்கொண்டமை ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் குழந்தைவேல் கருணைலிங்கம் எனும் ஆசிரியருக்கே இந்த குருதிக் கொடையாளர் ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது.

குருதிக் கொடையாளர் தினத்தை சிறப்பித்து தேசிய குருதி மாற்று பிரயோகசேவை தேசிய நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (ஜுன் 14, 2016) இடம்பெற்ற நிகழ்வில் குருதிக் கொடையாளி கருணைலிங்கம் கௌரவிக்கப்பட்டார்.

இவர் தனது 27 வயதிலிருந்து இதுவரை 19 தடவைகள் சுமார் 9975 மில்லிலீற்றர் குருதியை தானமாக வழங்கி வந்துள்ளார். அத்துடன் அதிகமான இரத்ததான நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். 2000.08.01ம் திகதியன்று தனக்கேற்பட்ட விபத்தின்போது யாரோ ஒருவர் தானம் செய்த இரத்தத்தின் மூலமே தனது உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் அந்த நிகழ்விலிருந்தே இரத்ததானம் செய்வதற்கு தான் உந்தப்பட்டதாகவும் தெரிவித்த கருணைலிங்கம் இது தனக்கு ஆத்ம திருப்தியை அளித்திருப்பதாகவும் கூறினார்.

LEAVE A REPLY