5600 மில்லிகிராம் கஞ்சாவுடன் நடமாடியவர் கைது

0
128

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrested44விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த 57 வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் ஏறாவூர் மீராகேணிப் பகுதிக்குச் சென்று சந்தேக நபரை வீதியில் வைத்து 5600 மில்லிகிராம் கஞ்சாவுடன் புதன்கிழமை (15 ஜுன்,2016) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY