பஸ் வண்டிக்கு கல்வீச்சு: மூவர் காயம்

0
95

(விசேட நிருபர்)

9630aefd-c18d-4b8f-9748-e5fe2a525e0dகல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிக்கு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா கோயில்குளம் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நேற்றிரவு(14.6.2016) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மூவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை டிப்போவுக்கு சொந்தமான இந்த பஸ் வண்டி பயணிகளுடன் கல்முனையிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இரவு 7.30 மணியளவில் தாழங்குடா கோயில்குளம் பகுதியில் வைத்து இனந்தெரியாதோரினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பஸ்வண்டியில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் ஆரையம்பதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியதுடன், வாழைச்சேனையைச் சேர்ந்த ரி.யோகராஜா(55) மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மட் தௌபீக்(42) ஆகிய இருவரும் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ரி.யோகராஜா என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் ஸ்தளத்திற்கு சென்று ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0ca64e87-4d91-48cd-9a1c-f3983e2ba4a7

LEAVE A REPLY