கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் குழு வெளிநாட்டு கல்விச் சுற்றுலாப்பயணம்

0
148

(விசேட நிருபர்)

flightகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் குழு வெளிநாட்டு கல்விச் சுற்றுலாப்பயணம் ஒன்றை மேற் கொண்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனரினால் இடை நிறுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளின் வெளிநாட்டு கல்விச் சுற்றுலாப்பயணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவையடுத்து கடந்த 12.6.2016 அன்று மேற்கொள்ளப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 10.6.2016 அன்று கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்தபோது அங்கு பிரதமரிடத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் , கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரிகளின் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணம் இடை நிறுத்தப்பட்டது தொடர்பில் எடுத்துக் கூறியதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த உத்தரவையடுத்து இவர்கள் வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவை மேற் கொண்டுள்ளதாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த கல்விச் சுற்றுலாவில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 12 வலயக் கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் ஐந்து பொறியியலாளர்கள், பிரதம செயலாளர், பிரதம கணக்காளர் என 29 பேர் அடங்குகின்றனர்.

பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ள கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த கல்வி அதிகாரிகள் குழு இரண்டு வாரங்கள் அங்கு தங்கி நிற்கவுள்ளனர்.

இந்த பயணத்தை துரிதமாக ஏற்பாடு செய்து கொடுத்த பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர், மாகாண சபை அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள் நன்றி தெரிவிப்பதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY