ரஷியாவுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்

0
87

160610075551_euro__2894460gயூரோ 2016 கால்பந்து போட்டியில் ரஷிய ரசிகர்களின் நடத்தைக்காக அந்நாட்டுக்கு சுமார் 170 ஆயிரம் அமெரிக்க டாலரை அபராதமாக ஐரோப்பிய கால்பந்து விளையாட்டு அமைப்பான யுஇஃபா விதித்துள்ளது.

விளையாட்டு அரங்கிற்குள் இனிமேல் வன்முறை நிகழ்ந்தால் அந்த அணி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மார்செய்யில் ரஷிய மற்றும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு இடையில் வார இறுதியில் நடைபெற்ற மோதல்களை கிரம்ளின் கண்டித்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகப்படுகின்ற பலரை வெளியேற்ற பிரான்ஸ் ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால், பிரான்சின் வடப் பகுதி நகரான லில்லுக்கு சிலர் செல்லுவதாக அச்சம் நிலவிவருகிறது.

-BBC-

LEAVE A REPLY