வறிய குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்குடன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

0
117

(M.T. ஹைதர் அலி)

1619f209-8a19-4f99-81e4-c43a11a78512கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வறிய குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்குடன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி பதுரியா சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஷிப்லி பாறூக் துவிச்சக்கர வண்டிகளை பயனாளிகளிடம் கையளித்து வைத்ததோடு, இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தரும் கலந்துகொண்டார்.

வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களை இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இவ்வாறான உதவித் திட்டங்கள்ஷிப்லி பாறுகினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் தங்களினால் மேற்கொள்ளப்படும் சுயதொழில் பொருட்களை ஊக்குவிப்பதற்காகவும், சந்தைப்படுத்துவதற்காகவும் இத்துவிச்சக்கர வண்டிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

LEAVE A REPLY