30 வருட யுத்தத்தினால் ஏற்பட்ட மரணங்களை விட நாளாந்தம் வாகன விபத்தினால் உண்டாகும் மரண எண்ணிக்கை அதிகரிப்பு: போக்குவரத்து பிரதிப் பொலிஸ் மா அதிபா்

0
165

(அஷ்ரப் ஏ சமத்)

15e7c05a-1020-4f41-95d8-f6f745fb2493இலங்கையில் கடந்த 30 வருட காலத்தில் நடைபெற்ற யுத்தத்தில் ஏற்பட்ட மரணங்களை விட நாளாந்தம் வாகனங்களினால் விபத்திற்குள்ளாகி மரணிக்கும் தொகை பெருகியுள்ளது என போக்குவரத்து பிரதிப் பொலிஸ் மா அதிபா் அமரசிறி தெரிவித்தாா்.

கடந்த 10 வருடத்தில் வாகான விபத்திற்களில்லாகி இந்த நாட்டின் பிரஜைகள் 24 ஆயிரம் பேர் மரணமடை ந்துள்ளனா், இதில் நடைபாதசாரிகள் 7692, மோட்டாா் பைசிக்கள் செல்வோா் மோதி 689பேர் இறந்துள்ளனா். 2015ஆம் ஆண்டு மட்டும் 502 பேர் முச்சக்கரவண்டியிலும் அதில் பிரயாணம் செய்த 229 பேர், இறந்துள்ளனா். அதில் 5வயதுக்குட்பட்ட சிறுவா்கள் மட்டும் 27 பேர் மரணமடைந்துள்ளனா். 2015ஆம் ஆண்டு மட்டும் வாகாண விபத்துக்கள் மட்டும் 20,434 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு்ளளன.

நேற்று(13) செத்திரிபாயவில் உள்ள சிவில், விமான  போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டின்போதே மேற்கண்ட தகவல்களை தெரிவித்தாா்.

அவா் தொடா்ந்து பேசுகையில் ,

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிக்குள் மட்டுமே போக்குவரத்துப் பொலிசாா் CCTV கமரா மூலம் போக்குவரத்து சட்டத்தை மீறியவா்களுக்கு கமரா மூலம் பதியப்பட்ட வாகனத்தின் இலக்கத்தை அடையாளம் கண்டு வழக்குத் தாக்குதல் செய்யப்படும் நடைமுறை வரவுள்ளது.

போக்குவரத்து சட்டத்தை மீறியவா்களது, வாகன உரிமையாளர்களது முகவரியை மோட்டாா் போக்குவரத்து திணைக்களம் முலம் பெற்றுக் கொள்ளப்படும். வாகன சொந்தக் காரா் வேறு ஒருவருக்கு விற்று இருந்தால், வாடகைக்கு விட்டிருந்தாலும் இவ் விடயங்களை வாகன உரிமையாளர்  நீதிமன்றத்தில் ஆஜராகி தெரிவித்தல் வேண்டும்.

”ஓப்பன் பேப்பர்” வெற்றுத் தாளில் ஒப்பமிட்டு வழங்கி வாகனத்தை விற்றிருப்பின் அவருக்கு எதிாராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தை விற்று இருப்பின் 24 மணித்தியாலயத்திற்குள் உடன் மோட்டாா் திணைக்களத்தில் உரிமை மாற்றியிருத்தல் வேண்டும் என போக்குவரத்து பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபா் அமரசிறி சேனாரத்தின தெரிவித்தாா்.

கொழும்பில் 115 CCTV கமாராவும் பொருத்தப்பட்டுள்ளன. மேலதிகமாக பொலிஸ் வாகனத்தில் CCTV கமரா பொருத்தப்பட்ட பொலிஸ் வாகனமும், ரோந்து 24 மணித்தியாலமும் நடவடிக்கையில் ஈடுபடும்.

கடந்த 2015 ஆண்டு மட்டும் 52 வீதத்திற்கு அதிகமான விபத்து மோட்டாா் பைசிக்கள் விபத்துக்களே இடம் பெற்றுள்ளன. அதில் 1199 பேர் மரணமடைந்துள்ளனா். இந்த நாட்டில் 35 இலட்சம் வாகனங்கள் பாதைகளில் ஓடுகின்றன.

இனி வரும் காலங்களில் புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது அடையாள அட்டை , கிராம சேவகா், தோ்தல் ்வாக்களிப்பு படிவம் மூலம் வாகனச் சொந்தக் காரா் வாழும் வசிப்பிடங்களும் கணணி  மயப்படுத்தப்படும். மேல் மாகாணத்தில் மெகா பொலிஸ் போக்குவரத்து திட்டம் அமுலாக்கியதும் வெளிநாடுகள் போன்று வீதி ஒழுங்கு போக்குவரத்து சட்டம் நடமுறைக்கு வரும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபா் தெரிவித்ததாா்.

LEAVE A REPLY