இத்தாலி முன்னாள் பிரதமருக்கு இதய சத்திர சிகிச்சை

0
95

201606141316362535_Italys-Berlusconi-undergoing-heart-surgery_SECVPFஇத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு நான்கு மணிநேர இதய ஆபரேஷன் தொடங்கியது.

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி(79). அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், பிரபல பத்திரிகை அதிபருமான இவர் கடந்தவாரம் திடீரென இதயம் சார்ந்த பாதிப்புக்குள்ளாகி, மிலன் நகரில் உள்ள ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்து “aortic valve” எனப்படும் இதய ரத்த குழாயில் உள்ள கோளாறை நிவர்த்தி செய்ய டாக்டர்கள் தீர்மானித்தனர். இதையடுத்து, சுமார் நான்கு மணிநேரம் நடைபெறும் இந்த அறுவை சிகிச்சை (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதாக அந்நாட்டின் பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY