சீனி எனக் கூறி கடத்தப்பட்ட பெருந் தொகை போதைப் பொருள் மீட்பு

0
141

cocaineஒருகொடவத்தை பகுதியில், பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கொக்கேயின் போதைப் பொருள் என சந்தேகிக்கப்படும் மூன்று மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

85 கிலோகிராம் நிறையுடைய இவை, சீனி கண்டைனர் ஒன்றில் இருந்தே கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை இவற்றின் பெறுமதி சுமார் ஒரு பில்லின் ரூபாய் என சுங்கப் பிரிவினர் கணக்கிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை மேலதிக விசாரணைகளுக்காக போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக, சுங்கப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், புறக்கோட்டை பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவராலேயே இவை கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

#Adaderana

LEAVE A REPLY