பதிவு செய்­யப்­படும் பள்­ளி­வாசல்­களை சவாலுக்குட்படுத்த முடியாது: வக்பு சபை­

0
357

gambar-masjid-vectorபள்­ளி­வா­ச­லொன்று அமைக்­கப்­பட்டு 6 மாதங்­களில் அது பதிவு செய்­யப்­ப­டா­விட்டால் அப்­பள்­ளி­வாசல் நிர்­வாக சபையில் தலை­யிட்டு அதனைப் பதிவு செய்யும் அதி­காரம் வக்பு சபைக்கு உண்டு என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாஸீன் தெரி­வித்தார்.

அதனால் பள்­ளி­வாசல் பதி­வு­களை எவ­ராலும் சவா­லுக்­குட்­ப­டுத்­தவோ தடுப்­ப­தற்கோ சட்­டத்தில் இட­மில்லை எனவும் அவர் கூறினார்.

பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘பெரும்­பான்மை இன அர­சி­யல்­வா­திகள் சிலர் தமது அர­சி­ய­லுக்­காக இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் பயன்­ப­டுத்­து­கி­றார்கள். பௌத்­தர்­களில் 99.9 வீத­மா­ன­வர்கள் முஸ்­லிம்­களை வெறுக்­க­வில்லை. நல்­லு­ற­வு­டனே இருக்­கி­றார்கள். 0.1 வீத­மா­னோரே இன­வா­தத்தைப் பரப்­பு­கின்­றனர்.

முஸ்­லிம்கள் நாம் அர­சியல் செய்­வ­தற்கு பெளத்த மதத்­தையோ பௌத்த மக்­க­ளையோ பயன்­ப­டுத்­த­வில்லை. எமது நாட்டின் அர­சியல் யாப்­பின்­படி இந்­நாட்டு பிர­ஜைகள் அனை­வரும் சம அந்­தஸ்து உடை­ய­வர்கள். அர­சியல் யாப்பில் எமக்­குத்­த­ரப்­பட்­டுள்ள சமய கலா­சார உரி­மை­களை எவ­ராலும் சவா­லுக்­குட்­ப­டுத்த முடி­யாது ஏனென்றால் முஸ்­லிம்கள் இந்­நாட்­டுக்கு வந்­தேறு குடிகள் இல்லை.

பள்­ளி­வா­சல்கள், தரீக்­காக்கள் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய சொத்­துக்கள் என்­ப­வற்றை வக்பு சபையே நிர்­வ­கித்து வரு­கி­றது. இதே­போன்று பௌத்த பன்­ச­லைகள் மற்றும் சொத்­துக்­களை நிர்­வ­கிக்க தனி­யான அமைப்பு சட்­ட­ரீ­தி­யாக உள்­ளது.

பள்­ளி­வா­சல்கள் பதி­வுகள் உட்­பட வக்பு சபையின் அதி­கா­ரங்கள் சட்­ட­மூலம் வழங்­கப்­பட்­ட­வை­யாகும். இவற்றில் மாற்­றங்­களைச் செய்­வ­தென்றால் அது பாரா­ளு­மன்­றத்­தி­னாலே முடியும். சட்­டத்தை இயற்­று­வதும் மாற்­றங்­களைச் செய்­வதும் பாரா­ளு­மன்­றமே என்­பதை பள்­ளி­வா­சல்­களை எதிர்ப்­ப­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வோர் இனமும் சமயமும் தத்தமது தனித்துவங்களைப் பேணிக் கொள்வதற்கு உரிமையுண்டு. முஸ்லிம்களையும் பள்ளிவாசல்களையும் எதிர்க்கும் பெரும்பான்மையினரில் மிகச்சிறிய அளவானோர் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

#விடிவெள்ளி

LEAVE A REPLY