மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கனா் மெசின் வாங்க முஸ்லிம் தனவந்தரால் 50 இலட்சம் நிதி

0
216

(அஸ்ரப் ஏ. சமத்)

1m3மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையாக இருந்த பெட் ஸக்னோ் மெசின் ஒன்றை கொள்முதல் செய்வதற்காக 4 மாதங்களுக்கு முன்பு எம்.என். முஹமட் தலைமையிலான கதிஜா பவுன்டேசனினால் 20 கோடி ரூபா சேகரிப்பதற்காக வைத்தியசாலையின் உதவியுடனும் சுகாதார அமைச்சின் அனுமதியுடனும் இத்திட்டத்தினை ஆரம்பித்திருந்தாா்.

நேற்று (13) கண்டி கட்டுகஸ்தோட்ட ரவுப் ஹாஜியாா் தனது மகன் ஹசன் ரவுப் (மதினாவில் ஹோட்டேல் துறை) முஹம்மத் ஹாஜியாா் ஊடாக 50 இலட்சம் ரூபாவை மகரகம வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் வில்பட்டிடம் கையளித்தாா்.

இன்றுடன் 200 மில்லியன் ரூபா இந் நிதிக்காக சேகரிக்கும் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஒரு மாதத்திற்குள் ஜேர்மணியில் இருந்து பெட் ஸ்கனா் மெசின் இலங்கை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக முஹமட் தெரிவித்தாா்.

மேலும் இவ் வைத்தியசாலைக்குத் தேவையான 25 கோடி ரூபா திட்டமொன்றும் ஆரம்பிக்கப்படும் எனவும் முஹமட் தெரிவித்தாா்.

1m1 1m5

LEAVE A REPLY