”ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது”: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை

0
160

trumpஓர்லாண்டோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிக்க தவறியதற்காக அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

ஒமர் மடீன் என்ற அந்த துப்பாக்கிதாரி வன்முறைகளுக்கு பெயர் போன ஒருவர் என்று தெரிந்திருந்ததாக தான் கருதுவதாக சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சில காரணங்களுக்காக ஒமர் மடீன் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது என்றார் ட்ரம்ப்.

orlando_fbi_wall_pulse_nightclubமுன்னர், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ப், இதே போன்ற தாக்குதல்களை நடத்தக்கூடிய திறன் படைத்தவர்கள் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் வெறுப்புணர்வால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஃபுளோரிடா தாக்குதல் சம்பவத்தை வைத்து ட்ரம்ப் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் என ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

(பி.பி.சி)

LEAVE A REPLY