காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய ஆசிரியை தாக்கியதாக கூறப்படுவது அபாண்டமாகும் -மாணவனின் உறவினர்கள் தெரிவிப்பு

0
142

(விசேட நிருபர்)

DSCN0539காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய ஆசிரியை தாக்கியதாக கூறப்படுவது அபாண்டமாகும் என மாணவனின் உறவினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இவ்வாண்டு எழுதும் மாணவர்களுக்காக பிரத்தியேக வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியை ஒருவர் அந்த வகுப்பில் கற்கும் மாணவர் ஒருவரை தாக்கியதையடுத்து அந்த ஆசிரியை மாணவரின் உறவினர்கள் பாடசாலை வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியை தாக்கியதாகவும் அது தொடர்பில் கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த மாணவரின் உறவினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய ஆசிரியையை தாக்கியதாக கூறப்படுவது அபாண்டமாகும். பொய்யை இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

எமது குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் குறித்த ஆசிரியையினால் தாக்கப்பட்டு படுகாயங்களுக்குள்ளான நிலையில் என்ன நடந்து என்று கேட்பதற்காக மாணவனையும் அழைத்துக் கொண்டு நாங்கள் பாடசாலைக்குள் சனிக்கிழமை முற்பகள் சென்று ஆசிரியை இடத்தில் ஏன் இப்படி அடித்தீர்கள் எனக் கேட்டோம்.

அப்போது அங்கு நின்ற அதிபர் கபூர் , எங்களின் தோளின் மேல் கையை வைத்து வாருங்கள் வெளியில் போவோம் என அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினார்.

எமது மாணவரின் நிலைமையைப் பார்த்து விட்டு நாங்கள் குறித்த ஆசிரியைக்கு ஏன் அடிக்க வேண்டுமென ஏசினோமே தவிர அந்த ஆசிரியை தாக்கவில்லை.

அவ்வாறு நாங்கள் ஆசிரியை தாக்கினோம் என ஆசிரியையும், அதிபரும் கூறினால் அவர்களிருவரையும் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயலில் சத்தியம் செய்ய வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எமது பிள்ளைக்கு அடித்து தாக்கி காயப்படுத்தி விட்டு எங்கள் மீதும் வீண் பழியை சுமத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

எனவே பாடசாலை ஆசிரியை நாங்கள் தாக்கவில்லை என்பதை மிகத்தெளிவாக கூறி வைக்கின்றோம்.

எமது பிள்ளை தாக்கப்பட்டமைக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்திருப்போம், ஆனால் சிலர் சமாதானம் பேசியதால் அவர்களின் கதையை மதித்து நாங்கள் மேலதிக நடவடிக்கைக்கு இறங்க வில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY