அப்பிளின் புதிய MacBook Pro எப்படி இருக்கும்?

0
96

macbook_pro_13inch_35440710_04கடந்த சில வாரங்களாகவே அப்பிள் வெளியிடவிருக்கும் புதிய MacBook Pro தொடர்பாக பல்வேறு வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

இதில் உள்ள function keys அனைத்தும் புதிய OLED panel தொழிநுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஏற்றது போல் புரோகிராம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் MacBook Pro தொடர்பாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி வடிவமைப்பாளர் மார்ட்டின் ஹசேக், கீபோர்டின் மேல் பகுதியில் சில keysக்கு புதிய OLED panel தொழில்நுட்பம் பயன்படுத்தியுள்ளார்.

இதுதவிர OLED panel தொழில்நுட்பத்துடன் வெளிவரவிருக்கும் notebook சாதனத்திலும் 4 USB ports கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எது எப்படியாகினும் இந்த சாதனம் தொடர்பான உண்மைத் தகவல்கள் உலகளாவிய வல்லுநர்கள் மாநாட்டின் (WWDC conference) போது தான் தெரியவரும்.

LEAVE A REPLY