சீனாவின் எக்ஸ்போ மாநாட்டில் இலங்கை- சீன வர்த்தக உறவு தொடர்பில் கலாநிதி இஸ்மாயில் விரிவுரை!

0
175

(அஸ்லம் எஸ்.மௌலானா)

99c78639-8430-4ce3-b241-3ce3523c5d7bசீனாவின் எக்ஸ்போ மாநாடு அந்நாட்டின் கும்மில் நகரில் இடம்பெறுகிறது. இதில் ஓர் அங்கமாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (12) இடம்பெற்றது.

இலங்கை சார்பில் சர்வதேச வத்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தலைமையில் தென்கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தரும் இலங்கை லக்சல நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் சீனா- இலங்கை வர்த்தக உறவு எவ்வாறு மேம்படுத்தபட வேண்டும் என்பது தொடர்பிலான 20 நிமிட ஆவணத்தொகுப்பினை கலாநிதி எஸ் எம் எம் இஸ்மாயில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

நிகழ்வின் இறுதியில் இலங்கைத் தூதுக் குழுவினருக்கு சீன நாட்டின் வர்த்தக அமைச்சரினால் இராபோசன விருந்துபசாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்வுயர்மட்ட கலந்துரையாடலில் ஏற்றுமதி அபீவிருத்தி சபை தலைவர், இலங்கை முதலீட்டு சபை தலைவர், இரத்தினக்கல் ஆபரணங்கள் நிறுவனத்தலைவர், தேயிலை ஏற்றுமதி சபை பிரதிநிதிகள் மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY