ஆங்கில மொழித் தினப் போட்டிகள்

0
151

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ce49582e-e5ec-448f-b2ef-52e189adeeb8இவ்வாண்டிற்கான மாவட்ட மட்ட ஆங்கில மொழித் தினப் போட்டிகள் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்டது.

கையெழுத்து, கூட்டெழுத்து, சொல்வதெழுதல், பேச்சு, மற்றும் கவிதையாக்கம், போன்ற, நிகழ்வுகள் முதலைக்குடா மகாவித்தியாலயத்திலும், அனைத்து பிரிவினருக்குமான நாடகப் போட்டிகள் அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் மற்றும் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 23 படசாலைகளைச் சேர்ந்த 64 மாணவர்களும், பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து 18 படசாலைகளைச் சேர்ந்த, 69 மாணவர்களும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து 22 படசாலைகளைச் சேர்ந்த 74, மாணவர்களும், கல்குடா கல்வி வலயத்திலிருந்து 15 படசாலைகளைச் சேர்ந்த 79 மாணவர்களும், மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து 12 படசாலைகளைச் சேர்ந்த, 88 மாணவர்களும், இதில் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மேற்குவலயம் ஆர்ம்பிக்கப்பட்டு முதன் முறையாக இவ்வித்தியாலயத்தில் மாவட்ட மட்ட ஆங்கில மொழித்தினப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

போட்டி முடிவுகளின்படி மட்டக்களப்பு வலய மாணவர்களுக்கு கூடுதலான இடங்கள் கிடைக்கப்பெற்று அவ்வலயம் முன்னிலையில் இருப்பதாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் கே. சத்தியநாதன் தெரிவித்தார்.

அடுத்த மாகாண மட்டப் போட்டிகள் யூலை 9 மற்றும் யூலை – 30 ஆம் திகதியும் எழுத்துப் போட்டிகள், தனி நிகழ்ச்சிகள், மற்றும் நாடகப் போட்டிகளும் யூலை 31 ஆம் திகதி கல்முனையில் நடைபெறவுள்ளதாக சத்தியநாதன் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY