மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை அதிகரிப்பு

0
260

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

443f0fb0-97d9-4695-bc45-5f1cbb89f945மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் தற்போது இரத்தப் பற்றாக்குறை உள்ளதாக இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி கே. விவேக் தெரிவித்தார். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

அதனை ஆரம்பித்து வைத்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2005 ஆண்டு உயர்தரப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் பழைய மாணவர் சங்கம் ஊடாக இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.டி. விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் அதிதியாக கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்.

இந்த நிகழ்வில் பழைய மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இரத்ததான முகாம் மூன்றாவது ஆண்டாகவும் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமில் இங்கு தொடர்ந்து உரையாற்றிய வைத்தியர் விவேக், மட்டக்களப்பு போதனா வைத்தியாலையில் இரத்த தட்டுப்பாட்டினை இயலுமான வரையில் குறைத்துக் கொண்டு சென்றாலும் இரத்தத்தின் தேவை முன்பைவிட அதிகளவில் அதிகரித்துச் செல்லும் நிலையிலேயே உள்ளது. எதிர்பாக்கும் தேவையினை விட மிகவும் அதிகளவில் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் தனிப் பிரிவு திறக்கப்பட்டுள்ளதுடன் இரத்தப் பாவனை அதிகமாகவுள்ள நிலையில் மட்டக்களப்பு இரத்த வங்கி பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளது.

இரத்தம் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் வைத்தியசாலையில் காத்திருக்கின்றனர். தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் மூன்று தினங்களாக வைத்தியசாலைக்கு வந்து செல்கின்றார். அவருக்கு இரத்தம் வழங்க இரத்தம் இல்லாத நிலை உள்ளது. அவர் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்.

அவருக்கு தலசீமியா நோய் உள்ளதை அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு தெரிவிக்காமலேயே இருந்து வருகின்றார். அவர் அந்த நோய் இருப்பதை தெரியப்படுத்தினால் அவரின் தொழில் இல்லாமல்போகும் என்பதுடன் அவரின் குடும்பமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

அந்த இளைஞன் உயிர்வாழ்வதற்கே கொடையாளிகளான நீங்கள் இரத்தம் வழங்கி உதவி செய்கின்றீர்கள். இவ்வாறு பலர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

LEAVE A REPLY