இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்துவதற்காகவே சிறுபான்மை மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள்: ஹாபிஸ் நஸீர்

0
182

( விசேட நிருபர்)

Naseer Hafisஇனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்துவதற்காகவே சிறுபான்மை மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெயினூப்தீன் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

மாகாண சுகாதார பயிற்சி நிலையக் கட்டிடத்திற்கான ஆரம்ப  நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

(11.6.2016) சனிக்கிழமையன்று மட்டக்களப்பு திராய்மடுப்பிரசேத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,  இழுத்தடிப்புக்களில்லாமல் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே சிறுபான்மை மக்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள்.

இனவாத சக்திகளை அடையாளம் கண்டு அந்த இனவாத சக்திகளுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் முகம் கொடுத்து எந்த தடைகள் வந்தாலும் அந்த தடைகளை உடைத்தெறிந்து இந்த இனப்பிரச்சினைக்கு வழமையான இழுத்தடிப்புக்களில்லாமல் உடனடியபாக தேவையை உனர்ந்து செயற்பட வேண்டும்.

இனவாத சக்திகளை தூக்கி வீசி விட்டு இன்பபிரச்சினைக்கான தீர்வு வரவேண்டும் என்பதற்காகவும் சிறுபான்மை மக்கள் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள்.

கிழக்கு மாகாண சபையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து நிதி தொடர்பாக அடிக்கடி கூறி வருகின்ற விடயத்தை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

13வது அரசியல் திருத்தத்திலே வெறுமனே அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தை மாகாண சபைகளுக்கு கொடுத்து விட்டு மறபுறம் அதை அமுல்படுத்துவதற்கான பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கிய வரலாறுகள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

அதே அதிகாரப்பகிர்வுடன் சமமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்பதை நாம் அனைவரும் ஏற்றே ஆகவேண்டும்.

இந்த நிதிவிடயத்திற்கு நாங்கள் கிழக்கு மாகாண சபைக்கு ஆட்சி வந்ததிலிருந்து குரல் கொடுத்து வந்ததன் காரணமாக இன்று பல சாதனைகளை புரிந்த மாகாண சபையாக எங்களுடைய கிழக்கு மாகாண சபை இருக்கின்றது.

கடந்த காலங்களில் ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு மேல் கிழக்கு மாகாண சபைக்கு நிதியொதுக்கீடு வந்த வரலாறு இல்லை. ஆனால் இந்த வருடம் 4500 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டது மாத்திரமன்றி அதையும் விட எங்களுடைய அமைச்சுக்கு பாதைகள் அமைப்பதற்காக 900 கோடி ரூபாவை கிழக்கு மாகாண சபைக்கு கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளையும் எடுத்து அதில் வெற்றிகண்டுள்ளோம்.

மாகாண முதலமைச்சர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து மாகாண சபைகளுக்கு நிதிகொண்டு வரவேண்டும் என்பதை முன்னெடுத்த நடவடிக்கையின் பயணாக இன்று சுமார் 5471 மில்லியன் ரூபா கல்வி அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியினை செயற்படுத்துகின்ற சபையாக கிழக்கு மாகாண சபை திகழ்கின்றது.

எங்களுக்கிருந்த பிரச்சினை என்னவென்றால் அதிகாரப்பகிர்வை சமாந்திரமாக தந்து விட்டு நிதியொதுக்கீடு செய்யப்பட வில்லை. நாங்கள் ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு நிதியொதுக்கீடுகளை பெறுகின்ற வழிகளை தெரிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டதன் காரணமாக இன்று வெற்றியடையக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வியமைச்சு இன்று பாரிய வேலைத்திட்டங்களை செயற்படுத்துகின்றது. அதே போன்று எனது உள்ளுராட்சி அமைச்சு பாரிய திட்டங்களை மேற் கொண்டு செல்கின்றது.

அடுத்த படியாக கிழக்கு மாகாண சுகாதாரத்தினையும் விவசாயத்தினையும் குறிக்கோளாக வைத்து வேலை செய்கின்றோம்.

நான் சிறிது காலம் மாகாண பதில் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவுடன் தொடர்பு கொண்டு பல திட்டங்களை அன்றே குறுகிய காலத்திற்குள் சமர்ப்பித்தோம்.

மத்திய சுகாதார அமைச்சு செய்யும் வேலைத்திட்டங்கள் மற்றும் நிதியொதுக்கீடுகளை மாகாண சபை மூலமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம் அதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு போதுமானதாக இல்லை, இந்த நிதியை வைத்து கிழக்கு மாகாணத்திலுள்ள முழு சுகாதார துறையையும் அபிவிருத்தி செய்ய முடியாது.

இந்த நிதியொதுக்கீடு மாற்றப்பட வேண்டிய தேவை நல்லாட்சி அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கின்றது என்பதை நாம் தெளிவாக வலியுறுத்தியுள்ளோம்.

நிதியொதுக்கீடு ஒட்டு மொத்தமாக பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றோம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு மாகாண சபைக்கு என்னுடைய வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை(10.6.2016) அன்று விஜயம் செய்தார்.

எந்தவொரு மாகாண சபைக்கும் பிரதமர் நான் அறிந்தவரை இதுவரைக்கும் செல்ல வில்லை.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு வருகை தந்து கிழக்கு மாகாண சபையின் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களும் தனித்தனியாக பிரச்சினைகளை பிரதமரிடம் முன் வைத்தனர். அதை பிரதமர் நன்கு கேட்டறிந்து கொண்டார்.

படைத்தரப்பு காணிகளை சுவீகரித்து வைத்திருப்பதாகவும் அதை விடு வித்து தரவேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விட்டார்கள். அதனை உடனடியாக ஒரு திட்ட வரைபை தயாரித்து தருமாறு பிரதமர் என்னிடம் கேட்டுள்ளார்.

அதே போன்று மாகாண சபையின் அபிவிருத்தி விடயங்கள் நிதியொதுக்கீடுகள் பற்றி எல்லா உறுப்பினர்களும் தெளிவாக கருத்துக்களை முன் வைத்தார்கள்.

அதை பிரதமர் கேட்டு அறிந்து கொண்டதுடன் அதை செய்து தருவதாகவும் பிரதமர் எங்களிடம் கூறினார் என இதன் போது மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY