400 ரன்னைத் தாண்டி விடுவேனோ என லாரா பதட்டமாக இருந்தார்- நினைவும் கூரும் கெய்ல்

0
98

201606122034087001_Chris-Gayle-Claims-Brian-Lara-Appeared-Worried-During-His_SECVPFடி20 கிரிக்கெட்டின் சிக்சர் மன்னன் என்று அழைக்கப்படுபவர் கிறிஸ் கெய்ல். இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ‘சிக்ஸ் மெஷின்’ என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் கிரிக்கெட் போட்டியின்போது தனக்கு கிடைத்த அனுபவத்தை கூறியுள்ளார். அப்போது ஒரு இடத்தில் லாரா தனது 400 ரன் (அவுட் இல்லை) சாதனையை நான் முறியடித்துவிடுவேனோ என்று பதட்டமாக இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கெய்ல் தனது புத்தகத்தில் ‘‘சில வீரர்கள் தங்களது சாதனை பற்றி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் லாரா நான்கு ரன்னில் அவுட்டாகி வெளியான பின்பு, வீரர்கள் அறையில் சென்று புத்ததம் வாசித்துக்கொண்டிருந்தார்.

அவ்வப்போது லாரா பால்கனிக்கு அடிக்கடி வந்து ஸ்கோரை பார்த்துக்கொள்வார். பின்னர் அறைக்கு திரும்பிவிடுவார். லாரா உள்ளே வெளியே அடிக்கடி சென்றதை பார்த்து ஆச்சரியப்பட்ட சர்வான், இதை கவனித்துள்ளார். மேலும், என்னுடைய ஸ்கோர் 300 ரன்னை தாண்டும்போது அவர் வெளியில் வந்து என்னுடைய ஸ்கோரை அடிக்கடி பார்த்துள்ளார். அப்போது அவர் மிக மிக கவலையாக இருந்துள்ளார்.

நான் மதிய உணவு இடைவேளை மற்றும் தேனீர் இடைவேளைக்கு வரும்போது அவர் என்னிடம் ஏதும் பேசவில்லை. எந்த வித அட்வைஸ், இதைச் செய் என்று எதுவும் கூறவில்லை. நான் மீண்டும் களம் இறங்கும்போது அவர் மெதுவாக சென்று புத்தகம் படித்து விட்டு, மீண்டும் வெளியே வந்து கவலையோடு என்னுடைய ஸ்கோரை பார்த்தார்’’ என்றார்.

இந்த போட்டியில் 317 ரன்னில் அவுட்டான கெயில், இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 333 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY