100 மீட்டர் தூரத்தை 9.88 வினாடிகளில் கடந்த உசைன் போல்ட்

0
146

201606121718068408_Usain-Bolt-stumbles-to-victory-in-9-88-seconds_SECVPFஉலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரராக திகழ்ந்து வருபவர் உசைன் போல்ட். இவர் கடந்த இரண்டு ஒலிம்பிக் தொடரிலும் (2008- பீஜிங், 2012- லண்டன்) 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இதைத்தவிர உலகச் சாம்பியன்ஷிப் தடகளம் போன்றவற்றிலும் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

சிறப்பாக ஓடிவரும் உசைன் போல்டுக்கு இந்த வருடம் சரியாக அமையவில்லை. தொடக்க ஓட்டம் சரியாக அமையாததால் போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 10 வினாடிகளை தொட்டுதான் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் நேற்று கிங்ஸ்டனில் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் போல்ட் கலந்து கொண்டார். அவர் நிக்கெல் அஷ்மியாடே, பிளேக் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி முதல் இடம் பிடித்தார். அத்துடன் இந்த வருடத்தின் 2-வது சிறந்த ஓட்டத்தையும் பதிவு செய்தார்.

பந்தய தூரத்தை போல்ட் 9.88 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். நிக்கெல் அஷ்மியாடே, பிளேக் ஆகியோர் 9.94 வினாடிகளில் கடந்த 2-வது மற்றும் 3-வது இடத்தையும், பாவெல் 9.94 வினாடிகளில் கடந்து 4-வது இடத்தையும் பிடித்தனர். பாவெல், பிளேக் ஆகியோர் 60 மீட்டர் வரை முன்னிலையில் இருந்தனர். அதன்பின் உசைன் போல்ட் வேகத்தை கூட்டி முந்தினார். இதற்கு முன் இந்த வருடத்தில் பிரான்ஸ் வீரர் ஜிம்மி விகாட் 9.86 வினாடிகளில் கடந்து முத்திரை பதித்துள்ளார்.

நேற்றைய ஓட்டம் குறித்து போல்ட் கூறுகையில் ‘‘இந்த வருடத்தில் சிறந்த ஓட்டத்தை நான் பெற்றுள்ளதால் மகிழ்ச்சி அடைகிறேன். தொடக்கநிலை சரியாக அமையவில்லை. இருந்தாலும் போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன்’’ என்றார்.

இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் பதக்கம் வெல்வாரா? என்ற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், சக வீரர்களுக்கு சவால் விடும் வகையிலும் இந்த ஓட்டம் அமைந்துள்ளது.

LEAVE A REPLY