சீனாவின் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: மூன்று பேர் காயம்

0
138

201606121500117540_Blast-from-explosive-injures-three-in-Shanghai-airport_SECVPFசீனாவின் தொழில்நகரமான ஷங்காயில் உள்ள விமான நிலையத்தில் இன்று குண்டு வெடித்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

சீனாவின் ஷங்காய் நகரில் உள்ள புடோங் விமான நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் அருகே (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் திடீரென்று குண்டு வெடித்தது.

அதிக வீரியமில்லாத இந்த குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்த மூன்று பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் படங்களுடன் செய்தி வெளியிட்டு வருகின்றன.

LEAVE A REPLY