மாணவரை ஆசிரியை தாக்க ஆத்திரமுற்ற மாணவரின் தகப்பன் ஆசிரியையை தாக்கினார்: காத்தான்குடியில் சம்பவம்

0
163

(விசேட நிருபர்)

DSCN0539மாணவர் ஒருவரை ஆசிரியை தாக்க ஆத்திரமுற்ற மாணவரின் தகப்பன் மற்றும் உறவினர் ஆசிரியை தாக்கிய சம்பவம் காத்தான்குடி பாடசாலையொன்றில் இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி பாடசாலையொன்றில் மாணவர் ஒருவரை ஆசிரியை ஒருவர் நேற்று (11.6.2016) சனிக்கிழமை தாக்கியுள்ளார். குறித்த மாணவர் காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரான சாஹீர் றஹ்மான்(10) எனும் மாணவரே இவ்வாறு ஆசிரியையினால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இவ்வாண்டு எழுதும் மாணவர்களுக்காக பிரத்தியேக வகுப்பை நடாத்திக் கொண்டிருந்தபோதே இந்த ஆசிரியை குறித்த மாணவரை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு சென்ற மாணவரின் தகப்பனும் மற்றும் மாணவரின் உறவினர் ஒருவரும் குறித்த ஆசிரியையை  தாக்கியுள்ளனர்.

தாக்கப்பட்ட மாணவர் காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் தாக்கப்பட்ட மாணவரும், தாக்கப்பட்ட ஆசிரியையும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை செய்தனர்.

பின்னர் நேற்று சனிக்கிழமை மாலை இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளை வாபஸ் பெற்றுக் கொண்டதுடன் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.

காத்தான்குடி பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை நடாத்தி வந்த நிலையில் இரு தரப்பினரும் தாமாக முன் வந்து முறைப்பாடுகளை வாபஸ் பெற்றுக் கொண்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY