ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொலை

0
85

imageமெக்சிகோவில் மர்ம நபர்கள் 2 பேர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மெக்சிகோவில் பியூப்லா மாகாணத்தில் மிகவும் உள்ளடங்கிய சான்ஜோஸ் எல் மிராடார் பகுதி உள்ளது. இது காஸ்காட்லான் நகரம் அருகே உள்ளது.

சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் 2 பேர் ஒரு வீட்டுக்குள் புகுந்தனர். எதிர்பார்க்காத நேரத்தில் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த கணவன், மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்களை சரமாரியாக சுட்டனர்.

இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் பெண்கள். 4 பேர் ஆண்கள் மற்றும் 2 சிறுமிகள் அடங்குவர்.

இவர்கள் தவிர 2 குழந்தைகளுக்கு குண்டு காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

துப்பாக்கி சூடு நடத்திய கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொலையாளிகளில் ஒருவன் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணை கற்பழித்தவன் என தெரிய வந்தது. அப்பெண் கர்ப்பிணியாக இருந்தாள். அதுகுறித்த பிரச்சினை காரணமாக இச்சம்பவம் நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

LEAVE A REPLY