சென்னை, கடலூரில் 100 டிகிரி வெயில்

0
120

imageதமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் 3 நாட்கள் விட்டு விட்டும், மாலை-இரவிலும் பலத்த மழை பெய்தது. தற்போது கேரளாவிலும் அதனையொட்டியுள்ள தமிழக பகுதியிலும் பருவமழை பெய்து வருகிறது.

ஆனால் சென்னையிலும் கடலோர பகுதியிலும் மழை இல்லை. மீண்டும் வெப்பம் அதிகரித்து வெயில் சுட்டெரிக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக சென்னையிலும் கடலூரிலும் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பம் ஓரளவு குறைந்து 34 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை (98.6 டிகிரி) இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்ன கல்லார், சின்கோனா ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

LEAVE A REPLY