‪‎ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் அதிபர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றனர்

0
171

(ஏ.எச்.ஏ. ஹு ஸைன்)

ba666f07-dd81-4a18-8fcc-adaf13ab2711ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் அதிபர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக பகிரங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதிய ஏறாவூர் நகரக் கிளை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பகிரங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதிய ஏறாவூர் நகரக் கிளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு முறைப்பாட்டு மனுவொன்றை ஞாயிறன்று 12.06.2016 அனுப்பி வைத்துள்ளதாக அதன் செயலாளர் எஸ்.எம். சுலைமாலெப்பை தெரிவித்தார்.

அதேவேளை திங்களன்று 13.06.2016 கிழக்கு மாகாண கல்வி அமைச்சரையும் மாகாண கல்விப் பணிப்பாளரையும் தமது அமைப்பின் நிருவாகக் குழு உறுப்பினர்கள் நேரடியாகச் சந்தித்து மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் ஓய்வூதியர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து தெரியப்படுத்தவுள்ளதாகவும் நிருவாகக் குழு உறுப்பினர் எம்.எஸ். அபூபக்கர் தெரிவித்தார்.

இது குறித்து அந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ள மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மறுசீரமைப்பு செய்யப்பட்ட இலங்கை அதிபர் சேவை பிரமாணத்தின் கீழ் உள்ளீர்ப்பு செய்யப்பட்டக்கூடிய சம்பளத் திட்டம் – சீராக்கல்படி வழங்குவதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அசிரத்தை காட்டுகின்றது.

மேலும் 2015ம் ஆண்டு தொடக்கம் உள்ளீர்ப்பு பனிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் இதுவரை அவர்களின் கோவைகள் செய்து முடிக்கப்படாமல் காலதாமதமாக்கப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு வருவதாக எமது ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், அதிபர்களும் மனவேதனை அடைகின்றனர்.

மேற்படி விடயம் தொடர்பாக வலயக்கல்வி பணிப்பாளருக்கு 04.06.2016இல் எம்மால் ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கான எவ்வித பதிலும் இதுவரை எமக்கு தரப்படவில்லை. ஒட்டு மொத்தமாக நோக்கும் போது ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் அதிபர்களும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக தோன்றுகின்றது.

மட்டக்களப்பு மத்தி வலயத்தில் மாத்திரம் தரம் – 1 அதிபர்களுக்கான சீராக்கல் படி விடயத்தில் வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. காரணமின்றிய மேற்படி புறக்கணிப்பால் ஓய்வு பெற்ற அதிபர்கள் விசனப்பட்டுக் கொள்கின்றனர்.

எனவே தரம் – 1 ஓய்வு பெற்ற அதிபர்கள் அனைவருக்கும் 770 ரூபாய் சீராக்கல் படியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதோடு இதன்படியே சீராக்கல் செய்து ஓய்வூதியர்களின் கோவைகளை ஓய்வூதிய திணைக்களத்திற்கு மிக விரைவாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

111ece73-c035-4240-8b41-a1d70a81086f

716e1721-a654-41c8-8b2b-13d58bcdbf1e

37949ff0-c808-4637-af15-beea830a70f1

ba666f07-dd81-4a18-8fcc-adaf13ab2711

LEAVE A REPLY