உங்கள் லேப்டொப் அதிக வெப்பத்தை வெளிவிடுகின்றதா? இதோ வழி

0
127

Nextbook-14-Windows-Laptopதற்போதைய கால கட்டத்தில் டெக்ஸ்டாப் கணனிகளை விட அதிக பாவனையில் உள்ள கணணி வகையாக லேப்டொப் காணப்படுகின்றது.

லேப்டொப் கணணிகளின் தொடர்ச்சியான பாவனையானது பொதுவாக 3 மணித்தியாலங்கள் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு ஏற்றாற் போல் அனேகமான லேப்டொப்களின் இணைக்கப்பட்டுள்ள பேட்டரியானது 3 மணித்தியாலங்கள் வரையே மின் வழங்கலை மேற்கொள்ளும்.இருந்தும் சிலர் தொடர்சியான மின்னிணைப்பை ஏற்படுத்திவிட்டு குறித்த மணித்தியாலத்தினை விடவும் அதிக நேரம் லேப்டொப்பினை பாவிப்பார்கள்.

இதன்போது லேப்டொப்பின் துணைப் பாகங்களில் அதிக வெப்பம் உற்பத்தியாக வெளியேற்றப்படும்.இதனால் பாவனையாளர் அசௌகரியமான நிலையை எதிர்நோக்க நேரிடும். இதற்காக குளிரூட்டும் விசிறிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும் அதனை விட அதிக வெப்பம் வெளியேறும் இடத்தில் செப்பினாலான நாணயக் குற்றிகளை அடுக்கி வைப்பதன் ஊடாக சிறந்த பயனைப் பெற முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர் டுவிட்டர் மூலம் தெரிவித்த இந்த ஐடியா தற்போது உலகம் முழுவதும் பிரபல்யமாகி பாராட்டைப் பெற்று வருகின்றது. எனவே நீங்களும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்.

LEAVE A REPLY