(Photos) இதுவரை ஜனாதிபதி மாளிகையை 40,000 பேர் பார்வையிட்டுள்ளனர்

0
41

President palaze 3ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின ஆலோசனைக்கமைய கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையானது வரலாற்றில் முதற் தடவையாக கடந்த 08 ஆம் திகதி மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன் மூன்றாவது நாளான நேற்று(10) அதனைப் பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பதினையாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தனர்.

தமக்கு கிடைக்கப்பெற்ற அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி இம்மக்கள் மிக உற்சாகத்துடன் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்கு வருகை தந்திருந்ததுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்கு சாதாரண பொதுமக்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தமை தொடர்பாக அவர்கள் ஜனாதிபதிக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இதுவரை சுமார் 40,000 பேர் வரை நாட்டின் நாலா பக்கங்களிலுமிருந்து ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ளனர்.

மொத்தம் இருபத்தொன்பது ஆளுனர்கள் மற்றும் ஆறு ஜனாதிபதிகள் தமது அலுவலக பணிகளுக்காகவும் வாசஸ்தலமாகவும் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமான ஜனாதிபதி மாளிகையின் வரலாறு காலணித்துவ காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்றது.

அதன் வரலாற்றுப் தொன்மையைப் பிரதிபலிக்கும் புகைப்படங்கள், முன்னாள் ஆளுனர்களினதும் ஜனாதிபதிகளதும் புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 14 ஆம் திகதி வரை பி.ப.2.00 மணி தொடக்கம் பி.ப. 7.00 மணி வரை ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன் 077- 3086366 அல்லது 0714- 241802 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

#ET

President palaze 1 President palaze 2 President palaze 4 President palaze 5 President palaze 6

LEAVE A REPLY