புகையிரத கட்டணத்தில், இன்று முதல் இவர்களுக்கு பாதி இலவசம்

0
83

Train_CIபடைவீரர் சிறப்பு அட்டைகள் வழங்கப்பட்டுள்ள அங்கவீனமுற்ற படையினர்களுக்கு இன்று முதல் சலுகை அடிப்படையில் கட்டணம் அறவிடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

படை வீரர் சிறப்பு அட்டைகள் வழங்கப்பட்டுள்ள அங்கவீனமுற்ற படையினர்களுக்கு சாதாரண பயணச்சீட்டில் 50 வீத சலுகை வழங்கப்படும் என்று புகையிரத திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார்.

அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து புகையிரத நிலையங்களிலும், படை வீரர் சிறப்பு அட்டைகளை காண்பித்து அங்கவீனமுற்ற படையினர்கள் சலுகை அடிப்படையிலான பயணச் சீட்டுக்களை பெற முடியும் என்று அவர் கூறினார்.

எனினும் ஆசன முன்பதிவு பயணச் சீட்டுக்களுக்கு இம்முறை செல்லுபடியாகாது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY