ஏறாவூரில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் கைது

0
116

Arrested44நபர் ஒருவர் கஞ்சா வைத்திருப்பதாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின் போது
 ஏறாவூர் றிபாய் பள்ளி வீதியில் நபர் ஒருவரை பொலிஸ் பரிசோதகர் வஹாப் தலைமையிலான மட்டக்களப்பு போதை தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொருட்டு ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதையை முற்றாக இல்லாதொழிக்கும் பொருட்டு அதிக அக்கறையுடன் செயற்பட்டு வரும் போதை தடுப்பு பிரிவின் பொருப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான வஹாப் தெரிவித்தார்.

புனித ரமழான் காலத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் பல விஷேட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் இதற்காக பொதுமக்கள் தங்களின் போதுமான ஒத்துழைப்பை வழங்க முன் வர வேண்டும் என மாவட்ட போதை தடுப்பு பிரிவினர் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY