வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு நிதி

0
153

(அஷ்ரப் ஏ சமத்)

imageபாக்கிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் வெள்ளம்பிட்டி, கொலாநாவை பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு 25 இலட்சம் ருபா நிதியை இன்று (10)ஆம் திகதி கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் தூதரகத்தில் வைத்து கையளித்தது.

இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50ஆயிரம் ருபாவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் செய்யத் சக்கீல் ஹுசைன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட ஒருவருக்கு காசோலையை வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம்.

image

LEAVE A REPLY