மன்னார் இ.போ.ச யின் பொறியியல் பிரிவின் அசமந்த போக்கு! மக்கள் அவதி

0
141

imageமன்னாரில் இருந்து காலை 6 மணிக்கு கல்பிட்டி நோக்கு சொல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான NB-8795 இலக்கம் கொண்ட பஸ் இன்று காலை 7 மணிக்கு முருங்கன் பிரதான விதியான நான்காம் கட்டை பிரதான சந்தியில் வைத்து பளுதடைந்ததாக பிரயாணிகள் விசனம் தெரிவித்தனர்.

இந்த இலக்கம் கொண்ட போக்குவரத்து பஸ்ஸின் சாரதியினை தொடர்புகொண்டு வினவிய போது;

நேற்று இரவு கூட போக்குவரத்து பொறியியல் பிரிவுக்கு இந்த பஸ்ஸின் நிலை பற்றி தெரிவித்தும் கூட உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்றும் இதனால் தான் பஸ் பளுதடைந்ததாகவும் தெரிவித்தார்.

போக்குவரத்து பொறியியல் பிரிவின் அசமந்த போக்கினால் இந்த பஸ்ஸில் பயணித்த நோயாளிகள், பொலில் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் உரிய நேரத்துக்கு செல்லவில்லை என்று விசனம் தெரிவித்தனர்.

எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மீண்டும் இப்படியான அசெளகரியங்கள் ஏற்படாமல் பிரயாணிகளை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

LEAVE A REPLY