டுவிட்டர் பயனர்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் செய்தி

0
93

f1b5lfuzmwvzs7nslwbnபேஸ்புக் வலைத்தளத்திற்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளமாக டுவிட்டர் காணப்படுகின்றது.

இந்த தளத்தில் உள்ள பயனர்களின் கணக்குகள் அண்மைக் காலமாக ஹேக்கர்களால் திருடப்படுவது அதிகரித்து வருகின்றது.

இத்திருட்டில் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனர்களின் கணக்குகளும் அடங்கும்.

இந்நிலையில் சுமார் 32 மில்லியன் கணக்குகள் திருடப்பட்டுள்ளதாக தற்போது ZDNet தளம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு திருடப்பட்ட கணக்குகள் கறுப்பு இணையத்தில் (Dark Web) விற்கப்பட்டுள்ளன.

அதாவது சுமார் 5,820 அமெரிக்க டொலர்கள் பெறுமதி உடைய 10 பிட்காயின்ஸ்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் டுவிட்டர் நிறுவனமோ இந்த கணக்குகள் திருடப்பட்டிருக்க முடியாது எனவும், அவற்றினை தம்மால் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் டுவிட்டர் திருடப்பட்ட கணக்குகளை மீளப்பெறுவதற்கு முனைந்து வருகின்ற அதேவேளை இக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்தும்போது மல்வேர் தாக்கங்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY