இறால் பெப்பர் ப்ரை

0
145

201606100957592562_Kerala-Style-Prawn-Pepper-Fry_SECVPFதேவையான பொருட்கள் :

இறால் – 400 கிராம்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 30 கிராம்
பூண்டு – 30 கிராம்
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டை தோல் உரித்து அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

* பின்னர் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 5 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடக்கூடாது.

* இறுதியில் கொத்தமல்லி தழை சேர்த்து பிரட்டினால், கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை ரெடி.

* இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

– இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

LEAVE A REPLY