இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
95

imageஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்திருப்பதால் அங்கு நிலநடுக்கம் என்பது அடிக்கடி ஏற்படக்கூடிய வாடிக்கையான சம்பவமாகி விட்டது. இந்த நிலையில் நேற்று லம்போக் தீவுப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சுமார் 4 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் பாலி தீவுப்பகுதியையும் உலுக்கியது. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளையும், பிற கட்டிடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவரவில்லை.

LEAVE A REPLY