மாணவர்களுக்கு சூடு; ஆசிரியை தற்காலிகப் பணி நீக்கம்

0
119

student_abuseவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேருக்கு சூடுவைத்த ஆசிரியை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

உளுந்தூர்ப்பேட்டைக்கு அருகில் உள்ள பாலி என்ற இடத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கூடம் ஒன்றில் 4 ஆம் வகுப்புப் படித்துவந்த மாணவர்கள் 13 பேர் பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காக வரவில்லை, ஒழுங்காகப் படிக்கவில்லை என அவர்களது காலில் பள்ளி ஆசிரியையான வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைத்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்டக் கல்வி அதிகாரி இளங்கோ விசாரணை நடத்தி, வைஜெயந்திமாலாவை தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார்.

மேலும் அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

#BBC

LEAVE A REPLY