அதிக தற்கொலை இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 3 ஆம் இடம்

0
143

re-600x330உலகிலேயே அதிக தற்கொலை இடம்பெறும் தரவரிசையில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய அறிக்கையை மேற்கோள்காட்டி, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உலக நாடுகளில் காணப்படும் மக்கள் தொகைக்கு ஏற்பட அந்த நாடுகளில் இடம்பெறும் தற்கொலை வீதம் ஒரு இலட்சம் பேருக்கு 11 வீதமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கையில் ஒரு இலட்சம் பேருக்கு 28.8 வீதமானோர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நுாற்றுக்கு 50 பேரே மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் பாவனையுடன் தொடர்புடையவர்கள். இதுவே அவர்களைத் தற்கொலை செய்வதற்கு தூண்டும் காரணியாக காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

-ET-

LEAVE A REPLY