கூகுளின் Street View திட்டத்திற்கு இந்தியா அனுமதி மறுப்பு

0
152

google-street-viewமுக்கிய இடங்களை 360 டிகிரி கோணத்தில் படங்களாக தொகுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் கூகுள் Street View திட்டத்திற்கு இந்திய உள்விவகாரத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.

கூகுள் நிறுவனம் கூகுள் Street View என்ற திட்டம் மூலம் உலகின் முக்கிய இடங்கள், சுற்றுலா தலங்கள், சாலைகள் போன்றவற்றை 360 டிகிரி கோணத்தில் படங்களாக பதிவு செய்து அதை கூகுள் மேப்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யும் திட்டத்தை செயல்படுத்திவருகிறது.

இந்த திட்டத்தை இந்தியாவிலும் செயல்படுத்த கூகுள் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு காரணங்களை கூறி Street View திட்டத்திற்கு உள்துறை அமைச்சம் மறுப்பு தெரிவித்துள்ளது.

2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மும்பை நகர புகைப்படங்களை பார்த்து தாக்குதலை திட்டமிட்டதை முன் உதாரணமாக காட்டி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY