மொகமது ஆமிருக்கு விசா வழங்கியது இங்கிலாந்து

1
89

201606091903185968_Mohammad-Amir-granted-UK-visa--PCB_SECVPFபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமிர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது 18 வயதில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்டில் விளையாடினார். அப்போது மேட்ச் பி்க்சிங்கில் ஈடுபட்டு ஜெயில் தண்டனை அனுபவித்தார். அத்துடன் ஐந்தாண்டுகள் தடையும் பெற்றார்.

தடைக்காலம் முடிந்து மீண்டும் சர்வதேச அணியில் மொகமது ஆமிர் இடம்பிடித்துார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

முதன்முறையாக தற்போது இங்கிலாந்து அணக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார். இங்கிலாந்து லாட்ஸ் மைதானத்தில் விளையாடும்போதுதான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார். தற்போது மீண்டும் அதே மைதானம் மூலம் ரீ என்ட்ரி ஆக இருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டை பொறுத்த வரையில் ஒருவர் ஜெயிலுக்கு சென்றிருந்தால் அவருக்கு விசா கிடைப்பது கடினம். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மொகமது ஆமிருக்கு விசா வழங்கு உதவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

இந்த வேண்டுகோளை ஏற்று ஆமிருக்கு இங்கிலாந்து விசா வழங்கியுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சுமார் 6 ஆண்டுகளுக்குப்பிறகு தனது டெஸ்ட் போட்டியை மீண்டும் தொடர இருக்கிறார் மொகமது ஆமிர்.

1 COMMENT

LEAVE A REPLY