காத்தான்குடி சின்னத் தோணாவின் புனரமைப்புக்கென எழுபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

0
211

(ஹைதர் அலி)

00c0422a-1469-4b50-b456-770cbdfbfa69மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மீன்பிடி இலாகா வீதியில் அமைந்துள்ள சின்னத் தோணா மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமையினால் மழை காலங்களில் வெள்ளநீர் நிரம்பி அப்பகுதியிலுள்ள வீதிகள் மற்றும் அப்பகுதி மக்களின் வீடுகளினுள்ளும் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் தோனாவினுள் மழை நீர், கழிவுநீர் மற்றும் குப்பைகள் போன்றவைகள் தேங்கியுள்ளதனால் கோடை காலங்களில் கூட தோனவிற்குள் துர்நாற்றம் வீசுவதோடு பல்வேறு சுகாதார சீர்கேடுகளையும் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இத் தோணாவை புனரமைப்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்ட முயற்சியின் பயனாக காத்தான்குடி சின்னத் தோணாவின் புனரமைப்பு பணிகளுக்கென முதற்கட்டமாக எழுபது இலட்சம் (7,000,000.00) ரூபா நிதி கிழக்கு மாகாண சபையின் மூலம் NELSIP திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்வேளைத்திட்டதிற்கான விலைமனுக்கோரல் பத்திரிகைகளின் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக விரைவில் சின்னத் தோனாவின் முதற்கட்ட புனரமைப்புப்பனிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த சில மாதத்திற்கு முன்பு இத்தோணாவினை துப்பரவு செய்யும் விடயத்தில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நேரடியாக சாக்கடைக்குள் இறங்கி சாதாரன ஊழியர்களுடன் ஒருவராக துப்பரவு பணியில் ஈடுபட்டு ஊழியர்களை உட்சாகப்படுத்தினார்

மேலும் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபை மூலமாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு சின்னத் தோனாவினுடைய புனரமைப்பு வேலைகளை முழுமைப்படுத்தி அப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

00c0422a-1469-4b50-b456-770cbdfbfa69

1d1d5e83-134b-4d1b-834b-9984d9f699a8

2b46e6c7-ba3a-436d-ba17-186dc5fb4f46

b5d5c707-d0bd-4dcf-9a84-c376364e881d

b2792a45-50b0-47dc-9f99-b458a4f42989

LEAVE A REPLY